புதன், செப்டம்பர் 07, 2011

தவம் என்றால் என்ன ? - வேதாத்திரி மகரிஷி

தவம் என்றால் என்ன ?


நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள புறத்தையும் உள்ளதை உள்ளவாறு உணர்வதற்கான பக்குவத்தை பெறுவதற்கான பயிற்சிதான் ‘தவம்’ . அறிய வேண்டியவைகளை முழுமையாக அறியப்பெற்று செய்யவேண்டிய செயல்களை நெறிபிறழாமல் செய்ய நம்மைத் தூண்டுவதே ‘தவம்’ ஞானம் பெருகி அஞ்ஞானத்தின் அவலம் குறைகிறது. கானகம் சென்றுதான் ‘தவம்’ செய்யவேண்டுமா? வேண்டாம்! இல்லறத்திலிருந்தே ‘தவம்’ செய்யலாம் தவத்தில்தான் ‘அமைதி’யான மனம் நமக்கு அமைகிறது. அந்த அமைதியால்தான் இல்லறத்தின் ஒவ்வொரு செயலிலும் இனிமையைக் காண்கின்ற பக்குவத்தை பெறமுடியும். ஞானிகள்தான் ‘தவம்’ இயற்றவேண்டுமா? இல்லையில்லை! குடும்பத்தாறுக்கே தவமும், அகத்தாய்வும் (தற்சோதனை) மிகவும் அவசியம் மன அமைதிக்கு அகத்தவமும், வினைத்தூய்மைக்கு அகத்தாய்வும் தேவை.அகத்தவம் மன ஆற்றலை பெருக்கும் அகத்தாய்வு மன ஆழுக்கை நீக்கும் !
இரண்டையும் பெற அன்பர்களே வாரீர் ! ‘தத்துவம், விஞ்ஞானம், வாழ்க்கை நெறி ‘ இவை பற்றிய சிந்தனைத்தூண்டல் தான் மனவளக்கலை தவ மையங்கள், அறிவுத்திருக் கோயில்களில் தரப்படுகிறது.

- மகரிஷி
வாழ்க வளமுடன் வளர்க வேதாத்திரியம்

சனி, ஏப்ரல் 09, 2011

சாந்தி தவம்

சாந்தி தவம்: "சாந்தி தவம்.
அன்பர்களே வாழ்க வளமுடன்!

சொந்த வீட்டில் அல்லது சொந்த ஊரில் பெயர் வாங்குவது கடினம்.
அது போன்று எவ்வளவு பெயரால் சாந்தி தவத்தை உணர்த்து முழுமையாக செய்ய முடிகின்றது.


வெள்ளி கிழமை கலை தீப பயிற்சி செய்த பின்பு சாந்தி செய்தால் நன்றாக உணர முடியும். தினமும் தூக்கத்திற்கும் முன்பு சாந்தி செய்து பழகினால் நல்லது.


நானறிந்த ஒன்றும் இங்கே: ஒரு சிறு கர்சீப்பை நீரில் நனைத்து, பிழிந்து பின் மூலாதாரப் பகுதியில் உருட்டி வைத்துக் கொண்டு தவம் செய்வது தாரணைக்கு எளிதாய் அமையும். மூலாதாரத்தின் உணர்வு நன்றாய் தோன்றிய பின் கர்சீப்பை எடுத்து விடலாம்.
ஒரு பழைய அன்பர் சொன்னது: குண்டலினி நமது முறையில் முதுகுத் தண்டுக்கு வல இடப்புறமுள்ள பிங்கலை, இட நாடிகளின் [உஷ்ண, குளிர் நாடிகள்] வழியாகத்தான் மேலெழும்புகின்றது. மூலாதாரத்தவத்தைச் செய்யும் போது ஒரு நனைந்த ஈரத்தண்டை முதுகுத்தண்டின் மீது முழுக்கப்படுமாறு போர்த்திக் கொண்டால், உஷ்ண, குளிர் நாடிகளின் வழியாக அத்துணை எளிதில் உயிராற்றல் மேலெழும்பாது, அப்படியே சற்றே எழும்பினாலும், நனைந்த துண்டு போர்த்தியமையால் அதை நம்மால் உணர இயலாது. இவ்வாறு மனம் குண்டலினியோடு சேர்ந்து நகரா நிலையில், மூலாதாரத்தில் தேங்கியுள்ள ஆற்றலிலே தான் மனம் நிலைக்கும். இது சாந்தி யோகத்தை நல்லபடியாகச் செய்ய வழிவகுக்கும்.
மேலும் தங்களுக்காக சில பழைய அன்பர்களைத் தொடர்பு கொண்ட போது இன்னும் சில பயனுள்ள நுணுக்கங்களை அறிந்து கொண்டேன்:

1. சாந்தித் தவம் துவங்குகையில் மூலபந்தத்தில் இருந்து வரலாம், அது கவனத்தை ஆசனவாய்ப்பகுதியில் இருத்த உதவியாய் அமையவல்லது.

2. அசுவினி முத்திரையைத் தவறாது போட்டு வருபவர்களுக்கு மூலாதாரப் பகுதியில் கவனத்தை வைப்பது பழக்கமாய் மாறிவிடும். அத்தகையவர்கள் சாந்தி தவத்தில் எளிதில் கவனத்தை அப்பகுதிக்கு நகர்த்தி விடுவார்கள்.

3. புவிக்கு தன் மீது படும் எந்த ஒரு காந்தக்களதையும் தன்னுள்ளே ஈர்த்துக்கொள்ளும் பண்பு உண்டு [earthing]. நாம் சம்மணமிட்டு தவம் செய்கையிலே புவியின் மேற்பரப்புக்கு மிக அருகாமையிலே அதைத் தொடுமளவுக்கு நமது மூலாதாரம் வருவதினாலே, அங்கே தேங்கியுள்ள காந்தம், புவியின் காந்தக்களத்தோடு பின்னிப் பிணைய ஏதுவாகின்றது. இந்த நிகழ்வு கூட, மூலாதாரத்தில் உறங்கும் காந்தத்தை நாம் உணர முடியாமற் போவதற்குக் காரணமாக் அமையக்கூடியதே. இதைத் தவிர்க்கவே நாம் பாய் போன்றவற்றில் அமர்ந்து தவம் செய்கின்றோம். இக்காரணத்தாலே, சற்றே உயரமான தலையணை, மடித்த கம்பளிப் போர்வை போன்றவைகளின் மீது அமர்ந்து தவம் செய்வது மூலாதார உணர்தலை எளிதாக்கும். சேர் மீது அமர்ந்து தவம் செய்தலையும் முயற்சிக்கலாம்.
சாந்தி தவம் சில சிந்தனைகள்
1. தண்டுவட சுத்தி செய்யும் போது மூச்சு விடும் போது மூலாதாரத்தை கவனிக்க வேண்டும்
2. மூலதாரத்தில் சிறு பந்து வைத்து தவம் செய்யலாம்
3. பிருத்த்வி முதிதேரியல்(mutra) மனம் வைத்து மூலாதாரத்தை கவனித்தால் சாந்தி நன்கு பிடிபடும்.
இன்னும் சில உத்திகள்
1989 ஆம் ஆண்டு நான் தர்மபுரி மன்றத்தில் சேர்ந்த போது, அருள்நிதி ரவி அவர்கள் கூறியது.
1 . அக்கு பிரஷர் செய்யும் முதல் புள்ளி இடது கை மூன்று விரலில் வைத்துக்கொண்டு, வலது கை ஆல் காட்டி விரல் மூலாதாரத்தை தொட்டு (முதுகு தண்டின் நுனிப்பகுதியை) தொட்டுக்கொண்டு இடது பக்கம் படுத்துக்கொண்டு செய்ய வேண்டும்.
தூக்கம் வரும் வரை (10 - 15 நிமிடங்கள் ) மனம் விரல் நுனியை கவனித்தவாறு இருந்தால் நன்கு தூக்கம் வரும். சாந்தி தவம் நன்கு உணர முடியும்.
சாந்தித் தவம். அதிகம் மனதுக்கு (பிடிபடாததற்கு)
தோன்றாததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ?

நமக்கு ஒரு பதினைந்து வயது இருக்கும் போதே மூலாதாரத்திற்கு ஆற்றல் வந்து விடுவதால்
நாம் முழுமையாய் தவம் கற்கும் காலம் வரை அங்கேயே (தாய்வீடு) இருந்ததால் புது இடத்திற்கு போனால் ஆக்கினை, துரியம்.இன்னும் பிற தவங்கள் மனதில் (உயிரில்) பதிகிறது வழக்கமாய் அங்கேயே இருப்பதால் தெரிவதில்லையோ?
சாந்தி தவத்தின் போது நாம் அங்கேதான் இருக்கிறோம். புது இடம்போல் பழகிய இடம் தோன்றாது.
யோகா சாதனையின் ஆற்றல் மிகுதியின் காரணமாகவோ, உணவின் காரணமாகவோ, ஆரத்சியின் காரணமாகவோ, அல்லது கோள்களின் நிலை காரணமாகவோ, தவக்கனல் மிகுந்தால், அதை உடனடியாக உணர்ந்து, தனித்துக் கொள்ளவும், அந்த தவக்கனளின் மிகுதியை உடல் நலனுக்கும், உள்ளத்தின் நலனுக்கும் பயனாக்கி கொள்ளவும் சாந்தி தவம் உதவுகிறது.
சாந்தி தவத்தினால் உடல் வெப்பம் தனியும், நரம்பு மண்டலம் அமைதி அடையும். தவத்தின் போது முழுமையான அனுபவம் ஏற்படும். உடலுக்கு மூலப்பொருளான வித்துக் குழம்பு பால் சுரப்பியில் தேங்கி கிடப்பதால் சாந்தி தவத்தால் தவ ஆற்றல் உடல் ஆற்றலாக மாறும்.
முதல் அறிகுறி
நாம் சாந்தி தவத்தை முழுமையாக செய்தால் முதலில் கண்கள் குளுர்ச்சி பெரும். இது ஒரு மூத்த பேராசிரியர் கூறியது.
1 .சாந்தி தவத்தால் நிலத்தை சார்ந்த ஆராய்ச்சி பற்றிய அறிவு அதிகமாகிறது.
2 .உடல் வலி, காய்ச்சல், அசீரணம் போன்ற நோய்கள் நீங்குகின்றன.
3 .உடலில் உயிரின் இயக்கம் சீராகிறது.
4 .உடல் சக்தி மனோ சக்தியாகவும், மனோ சக்தி உடல் சக்தியாகவும்
மாற்றி பயன் பெறலாம்.
ஆரம்ப பயிற்சியாளர்கள் ஒவ்வொரு வேளை சாப்பிட்ட பிறகும் மூன்று நிமிடம் இறங்குபடி கவனிக்க வேண்டும்.
இதற்கு உட்கார்ந்து தவம் செய்ய வேண்டும் என்பதில்லை.
சாப்பிட்டு முடித்தபின் அடுத்த அடுத்த காரியங்களை பார்த்துக்கொண்டே, நினைவை மட்டும் மூலதாரத்தில் வைத்திருக்க வேண்டும்.
மூலதாரத்திளிருந்து உணர்வு மேல்லேழுப்பப் பெற்ற உணர்வுவலார்களுடைய உயிர் ஆற்றலனது சில சூழ்நிலைகளுக்கு உள்ளாகும் போது சிதைவையும் , இழப்பையும் ஏற்க வேண்டி வரும். அவை :
1 . மாத விலக்கில் இருக்கும் பெண்களின் அருகாமை
2 . நாயின் அருகாமை
3 . பன்றியின் அருகாமை மற்றும்
4 . பிணத்தின் அருகாமை.
முகத்திலோ, கண்ணிலோ சூடு தெரியலாம். ஜூரம் வரலாம். வயிற்று வலி, வயிற்று பொருமல் போன்ற உஷ்ண வியாதிகள் வரலாம். அப்படி வந்து விட்டால், உடனடியாக சாந்தி யோகம் கொடுத்து விட வேண்டும்.
சாந்தியை பல காலம் செய்வதால் எந்தப் பிரச்சினையும் வராது.
மனதையும், உடலையும் அமைதி படுத்துவதால் தான் அதற்க்கு சாந்தி தவம் என்றே பெயர்.
சாந்தி தவம் செய்வதால் உடல் குளிர்ச்சி அடையலாம் .
உடல் செல்களின் காந்த துருவ இணைப்பு ஒரு ஒழுங்குக்கு வரும்.
நிலைக்கும்.
இதானால் நாள் பட்ட கர்ம நோயும் தீரும்.
கர்ம நோயை எதிர்க்க சாந்தி யோகம் செய்வதென்றால் தொடர்ந்து செய்து வர வேண்டும். தினந்தோறும் செய்ய வேண்டும். இரண்டு வேளையும் செய்து வர வேண்டும். மூன்று மாதம் செய்து வர வேண்டும். அதற்குள் அந்த நோயை அகன்று விடும். இல்லையென்றால் இன்னும் மூன்று மாதம் நீடித்து கொள்ள வேண்டும். இக்கலகட்டதில் மேல் தவம் எதுவும் செய்யக் கூடாது.
மூலாதாரம் மண்ணுக்குரிய மையமாகையினால்,
சப்த தாதுக்களில் மண்ணுக்குரிய வித்துவின் உற்பத்தி அதிகமாகும்.
அதனால் பால் உணர்வுகள் கூடுதலாகும்.
பால் உறவில் வல்லமை கூடும்.
இவற்றை சமாளித்து கொள்ள கூடிய அறிவு பலமும்,
குணா சிறப்பும் ஏற்கனவே பெற்றுக்க வேண்டும்.
பால் உணர்வில் வல்லமை இன்மையை போன்ற
பலகீனக்களையும் இந்த தொடர்ந்த சாந்தி யோகம் சரிப்படுத்தும்.

மலட்டு தன்மை கூட சாந்தி யோகம் சரிப்படுத்தும்.
பால் உணர்வு கருவிகளுக்கு பக்கத்தில் மூலதாரம் இருப்பதால்,
பால் உணர்வு வெறியும் எந்த தவம் தொடர்ந்து செய்வதால் உண்டு
பண்ணக் கூடும்.
சாந்தி யோகத்தால் பெரிய நன்மைகளையும் உண்டு
பண்ணிக் கொள்ளலாம் அல்லது
கஷ்டங்களை நீக்கிக் கொள்ளலாம்.
சீவ காந்த சிதைவு என்பது நாய், பன்றி, பூனை, ஆந்தை, கோட்டன் , வவ்வால் போன்ற உயிரினக்களில் உண்டு. அதை வளர்ப்பதிலும் , தொடுவதிலும் , கொண்ழுவதையும் யோகிகள் தவிர்த்தே ஆகா வேண்டும்.

சீவ காந்த உறுதி நிலை அருகம் புல், வேம்ப்பு, துளசி, பசு, யானை, மயில், மான், குழந்தை, , நவரத்தின கற்கள், வெள்ளி, பொன், பெண்கள்ளிடத்திலும் அதிகம் இருக்கும்.

பிணத்தில் பக்கத்தில் போக கூடாது. ஆனால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இந்த மாதிரி சீவ காந்த சிதைவு நிலைகளை எதிர் கொள்ள வேண்டி வரும் போது நாம் சாந்தி யோகத்தில் இருந்து கொண்டால் சீவ காந்த சிதைவு ஏற்ப்படாது.
வாழ்க வளமுடன். குருவே துணை.

நன்றி : தணிகைவேல், அருண், பூங்குழலி அம்மா,
"